மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நேற்றுமாலை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எண்ணெய் ஏற்றும் புகையிரதத்தில் நேற்றுமாலை 04.15 மணியளவில் மோதுண்டதிலயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் தனது வேக கட்டுப்பாட்டை இழந்து கல்குடா புகையிரத நிலைத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பு கடவையை உடைத்துக் கொண்டு புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.

விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதியான செபஸ்தியன் அருள்நாதன் (வயது48) என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.