கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக, பொலிஸ் விசேட படையினரை, நாளை தொடக்கம் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை, மெகசின், கொழும்பு சிறைச்சாலைகளுக்கே 100 பேர் அடங்கிய பொலிஸ் விசேட படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சிறைச்சாலைகளின் வெளிப்புற பாதுகாப்புக்காக இந்த குழுவினர் கடமையில் ஈடுபடுவர் என்றும் சிறைச்சாலைகளின் மதில்கள் ஊடாக பொருள்களை வீசுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.