கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் இடம்பெறும் இரண்டு ரயில் சேவைகள், இன்றும் நாளையும் சேவையில் ஈடுபடாதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் கல்கமுவ ரயில் நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே, இலக்கம் 81, 82 ஆகிய ரயில் சேவைகள் இடம்பெறாதென, ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.