முல்லைத்தீவு மாங்குளம், அம்பகாமம் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது குளவி கொட்டியதில் காயமடைந்த மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதுடன், கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று பேரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.