புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டதோடு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.16 மணியளவில் மத வழிபாடுகளுக்குப் பிறகு பிரதமர் நிதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த முக்கிய நிகழ்வின் அடையாளமாக மத்திய வங்கி ஆளுநரின் ஊடாக பிரதமருக்கு புதிய 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வழங்கப்பட்டது.