அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள, வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், இந்த 19ஆம் திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று நேரடியாக கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 19ஆம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது எஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.