கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 305 இலங்கை பிரஜைகள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.ஜோர்தான் மற்றும் கத்தாரிலிருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். கத்தாரில் வர்த்தக கப்பலில் பணி புரிந்த 20 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, ஜோர்தானின் அம்மானிலிருந்து இன்று அதிகாலை 4.35 மணியளவில் 285 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பினர். இன்று நாடு திரும்பிய அனைவரும் பீ.ஆர்.சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.