Header image alt text

SPOTLIGHT | 16.08.2020 -Tharmalingam Sitharthan

Posted by plotenewseditor on 19 August 2020
Posted in செய்திகள் 

(எம். நியூட்டன்)-

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஓரணியில் செயற்படாது விட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்னவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல வரைவை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உப குழு ஒன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில மற்றும் அலி சப்ரி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

மேலும் 10,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். Read more

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கும் அனைத்துத்தர மாணவர்களுக்கும் வகுப்புகளை நடத்துவதற்கும் கல்வி அமைச்சு இன்றையதினம் அனுமதி வழங்கியுள்ளது. பாடசாலைகளில் தேவையான வகுப்பறைகள் – வசதிகளுடன் கூடியதாக இருக்குமானால் சமூக இடைவெளி பேண முடியுமானதாக இருந்தால் இவ்வாறு அனைத்து பாடசாலைகளையும் திறந்து அனைத்து தர மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் பழி வாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் செப்டம்பர் 7ம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, இரா சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more

மன்னாரில் வைத்து ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக, இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளார். Read more

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.ஆர்.சி பரிசோதனை நேற்று அதிகளவில் முன்னெக்கப்பட்டுள்ளது. இதன்படி 3518 பி.ஆர்.சி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more