மன்னாரில் வைத்து ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக, இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் போக்குவரத்து சாலையின் பின் பகுதியில் வைத்து இலஞ்சம் பெற்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரிடம் முறைப்பாடு ஒன்றை சீர்செய்ய என குறித்த முகாமையாளர் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.