அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல வரைவை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உப குழு ஒன்றை அரசாங்கம் நியமித்துள்ளது. அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில மற்றும் அலி சப்ரி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆம் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து, 20 ஆம் திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது