பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்னவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது அவரின் ஆலோசகராக ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தபோதும் அவரது ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட கடமையாற்றினார்.