நாடாளுமன்றம் நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை நாளை (21) மற்றும் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இடைக்கால கணக்கறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.