1. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2. வரலாற்றின் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று நாடாளுமன்றுக்கு படகு மூலம் வருகை தந்துள்ளார். மதுர வித்தானக்கே எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு படகு மூலம் நாடாளுமன்றுக்கு பயணித்துள்ளார்.

3. மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியாருக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினர் இன்று வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் நில அளவைப் பணியை கைவிட்டு விட்டு திரும்பி சென்றுள்ளனர்.

4. வெளிநாடுகளில் சிக்கியிருந்த 730 இலங்கையர்கள் இன்றுஅதிகாலை நாடு திரும்பியுள்ளனர். டோஹா கட்டாரில் இருந்து 20 பேரும் குவைட்டில் இருந்து 160 பேரும் சென்னையில் இருந்து 290 பேரும் டுபாயில் இருந்து 260 பேரும் வந்துள்ளனர்.

5. முகத்துவார மீன்பிடி துறைமுகம் குறைந்தளவான வரி விகிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உட்பட 3 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

6. நாளைய தினம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதான மின் பரிமாற்ற அமைப்புக்கு தொடர்புபடுத்த உள்ள நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை (22) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

7. எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

8. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 5 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த 2765 எண்ணிக்கை பேராக பதிவாகியுள்ளது.

9. வவுனியா கனகராயன்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருள்கள், இன்று விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடி படையினர் வெடிக்காத நிலையில் காணப்பட்ட 8 மோட்டார் செல்களை மீட்டுள்ளனர்.