பல்வேறு அரசியல் முரண்பாடுகள் காரணமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியதுடன், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.