சபாநாயகர் அவர்களே!

ஒரு மிக நீண்ட பாராளுமன்ற அனுபவம் கொண்ட ஒருவர் சபநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது உண்மையிலே நாங்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம். இந்த புதிய அரசாங்கம் மிகப் பலம்பொருந்திய அரசாங்கமாக அமைந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகள் சிறிதாக இருந்தாலும் இரண்டையும் சமனாக பாவித்து, பாராளுமன்ற சம்பிரதாயத்தை பாவித்து நீங்கள் ஒரு நடுநிலையிலேயே உங்களுடைய செயற்பாடுகளை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. உங்களுடைய அனுபவம் அப்படிப்பட்டது.

அதேநேரத்தில் அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குகின்ற போது, ஒரு நியாயமான தீர்வு ஒன்று தேசிய இனப்பிரச்சினைக்கு அடைய வேண்டும். 70 வருடங்களாக இழுபட்டு வரக்கூடிய பிரச்சினை. இந்த நாட்டை மிகப் பின்னடைவைக் கொண்டுவந்திருக்கக்கூடிய பிரச்சினை. இதற்கொரு நியாயமான தீர்வைக் கொண்டுவர வேண்டும்.

அதற்கான இந்தப் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராளுமன்றத்திற்கு சரியான தலைமை வகித்து நீங்கள் ஒரு நியாயமான தீர்வை அடைவதற்கு நிச்சயமாக உதவுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

உங்களுடைய தேர்விற்கு நாங்கள் எங்களுடைய வாழ்த்தைத் தெரிவிக்கிறோம். நன்றி வணக்கம்.