Header image alt text

இலங்கைக்கான இந்தியத் தூதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்றுமாலை சந்தித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். Read more

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரை மற்றும் அனுமதி கிடைத்தவுடன் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றை ஒழிப்பதற்காக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை இலங்கையிலும் பாவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 114 இலக்கத்துக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் சேவைக்கான தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. Read more

செய்திகள்:

Posted by plotenewseditor on 21 August 2020
Posted in செய்திகள் 

1. மேலும் 24 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,789 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 118 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 2,918 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more