இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் இருந்து வருகை தந்த 2 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்த 6 பேருக்கும், துருக்கியில் இருந்து வருகை தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,927 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இதுவரை 2,789 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 127 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.