1. மேலும் 24 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,789 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 118 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 2,918 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2. வேலைத்தளத்தில் அல்லது கடமையில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு தற்பொது வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா நட்டஈட்டு தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.
3. வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதனடிப்படையில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் கட்டாரில் இருந்து 47 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அத்துடன் தாய்லாந்தில் இருந்து 88 பேர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4. தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்களை புதிப்பித்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்காக எதிர்வரும் காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் பிரதான பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்களுடனாக கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
5. யாழ் கொழும்புத்துறை பகுதியில் 25 வயதுடைய கவிச்சந்திரன் சிவனேஸ்வரன் என்பவர்மீது நேற்றுமாலை வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. அவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
6. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான பதவி வழங்கப்படும் என்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
7. கொழும்பு நவகமுவ பிரதேசத்தில் களனி கங்கையில் வீசப்பட்ட பல்வேறு வகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
8. வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய இருவரை, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடுகள் மற்றும் மோட்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சமயபுரம் பகுதியில் நெல் அரைக்கும் ஆலை ஒன்றில் 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நான்கு மோட்டர்களை திருடியமை மற்றும் காத்தார்சின்னக்குளம், ஆச்சிபுரம் பகுதிகளில் ஆடுகளை திருடியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த சந்தேகநபர்களின் மீது முன்வைக்கப்பட்டிருந்தது.
9. கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10. மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, வாகநேரி பகுயில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயது சிறுவன் பலியாகியுள்ளான். சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் (வயது-16) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளான்.