இலங்கைக்கான இந்தியத் தூதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்றுமாலை சந்தித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்தியத் தூதுவர்,

நடந்து முடிந்த தேர்தலின் பெறுபேறுகள் சம்பந்தமாகவும், அரசாங்கத்தினால் இப்போது சொல்லப்படுகின்ற அரசியலமைப்பு மாற்றம் வருகின்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படியாக செயற்படும் என்பது சம்பந்தமாகவும் கேட்டறிந்து கொண்டார்.