உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரை மற்றும் அனுமதி கிடைத்தவுடன் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றை ஒழிப்பதற்காக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை இலங்கையிலும் பாவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மாதேரியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். கொவிட் – 19 அச்சுறுத்தலை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் பாராட்டியுள்ளார்.

இலங்கையில் வைத்தியர்களை உருவாக்க ரஷ்யாவில் புலமைப்பரிசில் வழங்கி உதவிப் புரிந்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ரஷ்ய தூதுவர், இலங்கையுடன் காணப்படும் உறவை பலப்படுத்த தொடர்ந்தும் அவ்வாறான புலமைப் பரிசில்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.