மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. குறித்த மரணம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவு பெண் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள் மன்னார் பொலிஸாரின் உதவியுடன் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த யுவதி யாழ் நெடுந்தீவை சேர்ந்த 21 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்டவர்களில் உயிரிழந்த யுவதியின் இரத்த உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது. சம்பவ தினத்தில் நெடுந்தீவை சேர்ந்த கொலையான யுவதியை, கைதான இரண்டு பெண்களும் மன்னாரிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் விசாரணை மூலம் வெளியாகியுள்ளது.