கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கியிருந்த மேலும் 291 பேர் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த குழுவினர் மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பிஆர்சி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.