கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு இணையதிகாரியான கேர்னல் சஜாட் அலி, அவரது பணிவு கால நிறைவின் பின்பு தூதரகத்தை விட்டு செல்வதன் நிமித்தம் நேற்று இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்தார். இச்சந்திப்பின் போது இராணுவ தளபதி 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானால் கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வழங்கிய தளபாட ஒத்துழைப்பிற்கும் நன்றியை இந்த அதிகாரியுடன் பகிர்ந்து கொண்டு விடைபெற்றுச் செல்லும் இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கை ஆயுதப் படைகளுக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் தொடர்ச்சியான சிறந்த ஆதரவை உறுதிப்படுத்திய கேர்னல் சஜ்ஜாத் அலி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையில் கோவிட் -19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணித்த சேவைகளுக்காகவும், தனக்கும் இலங்கைக்கும் இடையில் திறம்பட செயல்படும் உறவுகள் குறித்து நன்றி தெரிவித்தார்.

இலங்கை ஆயுதப் படைகள் பாக்கிஸ்தானின் ஆயுதப் பிரிவுகளில் உறுப்பினர்களை இலங்கையில் பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு இடமளித்தமைக்கும், அவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கியதற்கும் அவர் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின் இறுதியில் இவர்கள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.