முப்படையின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31,173 பேர் இதுவரை வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதேபோல், இன்று (22) தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 15 பேர் வீடுகளுக்கு செல்லவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கல்பிட்டி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து ஒருவர் மற்றும் மிஹிந்தலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 14 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

அதன்படி, நாட்டில் பராமரிக்கப்படும் 48 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,855 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.