9ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இருநாள் விசேட செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து, தெளிவுப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் காலை 9 மணிதொடக்கம் மாலை 6 மணிவரை நாடாளுமன்ற குழு அறை ஒன்றில் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளதென்றும், இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலமர்வின் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதாஸ ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.