கோஷ்டி மோதல் காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் பலியானதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது உறவினர்களான இருவரும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயமொன்றே, கோஷ்டி மோதலாக மாறி பின்னர் பழி தீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வாள், ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.