மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் பயணித்த ஒருவர், தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். சங்கானை விழிசிட்டியில் நேற்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் (வயது 32) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரமொன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போதே மக்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்துந்துள்ளரென மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.