அம்பாறை திருக்கோவில் பாவட்டாய் பகுதியில் ஆகஸ்ட் 20ம் திகதி அன்று காணி ஒன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. இதேவேளை முன்பு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறில் நேற்று பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து விமானப் படையினரினால் யுத்த காலங்களில் உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றின் பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.