மட்டக்களப்பு ஏறாவூர், கொம்மாந்துறை பகுதியில் 14 வயதான சிறுவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுரை 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றில் தாம் தாக்கப்பட்டமைக்கு நியாயம் கோரி தமது உறவினருடன் குறித்த 14 வயது சிறுவன் தாக்கியவர்களை சந்திக்க சென்றிருந்த வேளையில், அவர் வாளால் வெட்டி கொல்லப்பட்டார்.

இதன்போது குறித்த சிறுவனின் உறவினர்கள் இருவரும் காயமடைந்தனர். இதுபற்றி ஏறாவூர் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்று மூவரும், நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, கொலைக்கு பயன்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.