மன்னார் சௌத்பார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொரிக்கா ஜூயின் என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான தாய் மாமன் நேற்று (24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர். முன்னதாக கொல்லப்பட்ட யுவதியின் சகோதரி உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.