அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் இன்று நடைபெற்றது. இதன்போது, அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.