திருகோணமலை சம்பூர், கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில் அமெரிக்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடன், 93 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம், ஆசிரியர் விடுதி, கழிப்பறை ஆகியனவற்றின் திறப்புவிழா, பாடசாலை அதிபர் எஸ்.பாக்கியேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா வீ டெப்லீக்ஸ், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் முத்துபண்டா என பலர் பங்கேற்றிருந்தனர்.