மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேர் அர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு நாரஹன்பிட்டியில் உள்ள இராஜாங்க அமைச்சில் இன்று உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலராக கடமைகளை ஏற்ற அவர், பாதுகாப்பு, இராணுவம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் என்பன ஒன்றாக ஒருங்கிணையும்போதே மக்கள் வாழ ஒரு அமைதியான சூழலை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ´சுபீட்சத்தின் நோக்கு´ எனும் தூரநோக்கு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ஆற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் அவற்றினை அடைவதற்கு ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டிய கடப்பாடு காணப்படுவதாகவும் மேஜர் ஜெனரல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.