இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்கவும் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராக பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற வெளிநாட்டு தூதுவருடனான முதலாவது சந்திப்பு இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.