நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். பொலநறுவை கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற 10 கைதிகளுக்கும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,984 ஆகும். தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 819 ஆக காணப்படுகின்றது. தற்போது, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 153 ஆகும்.