மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 186 இலங்கையர்கள் இன்று பகல் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க மற்றம் மத்தல விமான நிலையங்கள் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். முற்பகல் 11 மணிக்கு மாலைத்தீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு 26 பேரும், பிற்பகல் அவுஸ்திரேலியாவில் இருந்து பிற்பகல் 2 மணியளவில் 160 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்படவுள்ளனர்.