கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம் எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் இடம்பெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான 31ம் திகதி மன்னார் பிரதேச செயலகம் முன்பாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.