கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 462 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். பிரித்தானியா, மாலைதீவு, துருக்கி முதலான நாடுகளில் இருந்து அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.