ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவி தொடர்பில் நிலவும் சிக்கலை தீர்ப்பதற்காக அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் குழுக்கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டம் பத்தரமுல்லை-பெலவத்த பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்போது ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்த கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டியது அவசியமானது என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் சபாநாயகர்ரூnடிளி;கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பை பெற்று கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் என்ற கோட்பாடும் இதன் போது முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.