கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரமந்தனாறு பகுதியில் இடம்பெறும் பாலமொன்றுக்கான நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார். தர்மபுரம் பகுதியை சேர்ந்த 36 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.