கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய மேலும் 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2,988 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ள 126பேர் பல வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாலைதீவில் தங்கியிருந்த 287 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விசேட விமானம் ஒன்றின் மூலமே நாட்டுக்குள் வந்துள்ளனர். இஇவர்கள் சுற்றுலா துறை சார்ந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.