வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் வவுனியா நகரசபையினரின் படகு சவாரி உட்பட பல்வேறு செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம் இன்று காலை 9.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச் சுற்றுலா மையத்தினை வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் நடா வெட்டி திறந்து வைத்தார். குறித்த சுற்றுலா மையத்தின் குத்தகையாளராக ரு ழுநெ நுஎநவெ ஆயயெபநஅநவெ புசழரி நிறுவனத்தினர் திகழ்கின்றனர்.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தில் படகு சவாரி, நீருக்கு நடுவில் பிரமாண்ட சிற்றுண்டிச்சாலை, சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள், மீன் மசாஸ், 3டி சினிமா, விடியோ கேம்ஸ் என்பன உள்ளங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.