மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்ட மா அதிபர், பாராளுமன்றம் செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார். கடந்த 2015, ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.