நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்றுபேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,015ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் கட்டாரில் இருந்து இலங்கை வந்த ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,868 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.