04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார்.ரணில் விக்ரமசிங்க இன்று காலை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகினார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முற்பகல் 10 மணியளவில் ரணில் விக்ரமசிங்க ஆஜராகினார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிகன் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசமும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயரதிகாரிகள் என பலரிடம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.