வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முசாமில், ஊவா மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஊவா மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொள்ளுரே, வடமேல் மாகாண ஆளுநராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.