ரஷ்யாவின் மூன்று யுத்தக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. அட்மிரல் ட்ரிபக், அட்மிரல் வினோகிராதொவ், பொரிஸ் புட்டோமா ஆகிய 3 கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன. விநியோக தேவைகள் மற்றும் அலுவலக பணியாளர்களின் ஓய்வுக்காக இக்கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன்,

சுகாதார ஆலோசனைகள் மற்றும் முறைகளுக்கமைய இக் கப்பலுடனான தொடர்புகள் பேணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.