கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,081ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்களும் கட்டாரிலிருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.