சிறைக்கைதிகள் 444பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பெண்களும் உள்ளடங்குவதாகவும், சிறைச்சாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப் பட்டியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறையிலுள்ள நெருக்கடியை கவனத்தில் கொண்டு சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.