திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை திடீரென்று மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் மனையாவெளி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தனூசியன் (வயது-19) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து சக உறவினர்கள் திருமலைக்கு சுற்றுலா வந்திருந்தபோது அதில் வந்த ஒருவர் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் திடீரென தொலைபேசி துண்டிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அவரது வீட்டுக்கு அருகே சென்றபோது தவறுதலாக விழுந்திருந்த குறித்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் மரணமடைந்தமை தெரியவந்ததாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.